Pages

Monday 6 August 2012

இஸ்லாமிய கண்ணோட்டத்தில் ஜனநாயகம்

1/

இஸ்லாமிய கண்ணோட்டத்தில் ஜனநாயகம்!!

 நாங்கள் அல்லாஹ்வுடைய வஹியை மாத்திரம்  பின்பற்றக்கூடியவர்கள் அல்லாஹூத்தஆலா கூறுகிறான் : சட்டமியற்றும் அதிகாரம் அல்லாஹ் வைத்தவிர யாருக்குமில்லை (12:40)

எனவே வாழ்கையில் எந்தத்துறையாக  இருந்தாலும் அல்லாஹ் ஒரு சட்டத்தை இயற்றிவிட்டான் என்று சென்னால் அதற்கு  முரணாக சட்டமியற்றும் அதிகாரம் எவருக்கும் கிடையாது பூமியில் உள்ள அத்தனை
பேரும் முஸ்லிம்களாக இருந்தாலும் சரி முஸ்லிம் அல்லாதவர்களாக இருந்தாலும் சரி அவர்கள் அல்லாஹ்வின் அடிமைகளே அந்த அல்லாஹ்வின் சட்டத்திற்கு மாற்றமாக சட்டமியற்றும் அதிகாரம் எவருக்கும் கிடையாது. அப்படி யாரும் அல்லாஹ்வுடைய சட்டதிட்டங்களுக்கு மாற்றமாக சட்டம் இயற்றினால் அவர்களுக்கு கட்டுப்பட கூடாது என்பது இஸ்லாத்தின் அடிப்படை.

நபி(ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் : படைத்தவனுக்கு மாறு செய்யும் விடயத்தில் படைப்பினங்களுக்கு எவ்வித கட்டுப்பாடும் கிடையாது (முஸ்லிம்)

இந்த அடிப்படையின் பிரகாரம் அல்லாஹ்வுடைய சட்டதிட்டங்களுக்கு முரணாக அடியார்களுடைய சட்டத்தை ஒரு முஸ்லிம் ஏற்றுக்கொள்ள முடியாது. ஒரு அடியான் அல்லாஹ்வுடைய சட்டத்திற்கு மாற்றமாக சட்டம் இயற்ற முடியும் என்றால் இவ்விடயமானது அல்லாஹ்வுக்கு மாத்திரம் உள்ள அதிகாரத்தை மற்றவர்களுக்கு கொடுப்பதாகும் இது இணைவைத்தலாகும். இந்த அடிப்படையில் சட்டமியற்றும் அதிகாரம் அல்லாஹ்வுக்கு மாத்திரம் என்று தான் ஒரு முஸ்லிம் நம்பவேண்டும். அதே நேரம் அல்லாஹ்வுடைய
சட்டத்திட்டங்களை விட்டு விட்டு அதற்கு முரணான வேறு சட்டங்களிடம்
தீர்ப்புகேட்டுச் செல்பவர்களை அல்லாஹ் விசுவாசியாக அங்கீகரிக்கவில்லை மாறாக நயவஞ்சகர்கள் அவ்வாறு செய்வதாகவும் அல்லாஹ் பின்வறக்கூடிய குர்ஆனிய வசனங்களில் கூறுகிறான் :

உமது ரப்பின்மீது சத்தியமாக! (அவர்கள்) தங்களுக்கு மத்தியில் நடந்த சச்சரவில் உம்மைத் தீர்ப்பாளராக ஏற்று, பின்னர் (நீர்) வழங்கிய தீர்ப்பைத் தங்களது உள்ளங்களில் எவ்வித அதிருப்தியும் இல்லாமல் முற்றிலும் ஏற்றுக்கொள்ளாதவரையில் (அவர்கள்) விசுவாசிகளாக மாட்டார்கள்.(04:65)

(நபியே) உம்மீது இறக்கப்பட்டதையும், உமக்கு முன்னர் இறக்கப்பட்டதையும் விசுவாசிப்பதாகச் சாதிக்கின்றவர்களை நீர் கவனிக்கவில்லையா? (அவர்கள்) தாகூத்திடம் தீர்ப்புக் கேட்டுச்செல்ல விரும்புகின்றனர். அவனை நிராகரிக்கும்படி (ஏற்கனவே அவர்கள்) நிச்சயமாக ஏவப்பட்டுள்ளார்கள். ஷைத்தானோ அவர்களை மிகத் தாரமான வழிகேட்டில் இட்டுச்செல்லவே விரும்புகின்றான். அல்லாஹ் இறக்கியதன்பாலும், அவனது தூதரின்பாலும் வாருங்கள் என அவர்களுக்குக் கூறப்பட்டால் நயவஞ்சகர்கள் ஒரேயடியாக உம்மை விட்டும் (தங்களை) தடுத்துக்கொள்வதைக் காண்பீர்.(04:60,61)

ஆகவே இதுதான் ஜனநாயகம் பற்றிய எமது அடிப்படை. அத்தோடு அல்லாஹ்வுடைய சட்டத்திற்கு முரணில்லாத சட்டங்களை இஸ்லாம் எமக்கு தடைசெய்யவில்லை. அல்லாஹ்வுடைய சட்டங்களுக்கு முரணான சட்டங்களைப் பொறுத்தவரையில்; நிர்பந்திக்கப்பட்டால் செய்வோமே தவிர அவற்றை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளமாட்டோம்.

கண்ணிமிக்க அல்லாஹ் கூறுகிறான் : எந்த ஓர் ஆத்மாவும் அதன் சக்திக்கு மேல் நிர்ப்பந்திக்கப்பட மாட்டாது (2:233) மேலும் பார்க்க : 16:106