Pages

Friday 28 October 2011

நவீன ஜனனாயகம் இஸ்லாத்துடன் ஒட்டு மொத்த மாகவும் தெளிவாகவும் முரண்படுகிறது

கடந்த வெள்ளிக்கிழமை (21-10-2011) கலாநிதி யூஸுப் கர்ளாவி அவர்கள் நிகழ்த்திய குத்பா உரையில் 'இஸ்லாமிய ஜனனாயகக் குடியரசொன்றை எகிப்து,லிபியா,டியுனீஸியா உள்ளிட்ட நாடுகளின் புரட்சியாளர்கள் நிறுவ வேண்டும்' என்றும். 'இன்றைய ஜனனாயகம் இஸ்லாத்துக்கு முரணானதல்ல' என்றும் கூறியிருந்தார்.

எந்த மனிதனும் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவனல்ல.எல்லா மனிதனும் தவறு விடக் கூடியவன்.எந்த விடயத்திலும் இஸ்லாமியக் கண்ணோட்டம் இருப்பது அவசியம் என்ற அடிப்படையில் கலாநிதி யூஸுப் கர்ளாவி அவர்களின் இந்தக் கருத்தைப் பற்றிய இஸ்லாமியக் கண்ணோட்டத்தை இங்கே பார்க்கப் போகின்றோம். முஸ்லிம் உலகில் பிரபல்யமிக்க அறிஞராக இருந்தாலும் அவரது கூற்று இஸ்லாமிய ஆதாரங்களின் அடிப்படையில் தவறானது என்பதை தமிழ் பேசும் முஸ்லிம் களுக்கு தெளிவுபடுத்த வேண்டும் என்ற நோக்கில் இந்த வரிகளை எழுதுகின்றேன். அறிஞர்களை மதிக்கின்றோம் ஆனாலும் அவர்கள் அறிஞர்களாயிற்றே என்பதற்காக அவர்களைப் பின் பற்றுவதை விட்டு விட்டு அவர்களின் கருத்துக்களைப் பின்பற்றுபவர்கள் நாம் என்பதால்,குர்ஆன் ஹதீஸின் வெளிச்சத்தில் அவருடைய கருத்துக்களை உரசிப் பார்ப்பது எம் மீதுள்ள கடமை என உறுதியாக நம்புகின்றோம்.

முஸ்லிம் நாடுகளை ஒன்றிணைத்தல் என்ற விடயம் இஸ்லாமிய ஷரீஆவின் படி கடமையான விடயம் என்பதால் அதற்காக அழைப்பு விடுத்தமை பாராட்டத்தக்கதாகும். ஆயினும் இஸ்லாமிய நம்பிக்கைக் கோட்பாட்டுக்கு முரணான ஜனனாயக முறையில் குடியரசு நிருவப்பட வேண்டும் என்பதும் ஜனனாயகம் இஸ்லாத்துக்கு முரணாணதல்ல என்பதும் கண்டிக்கத்தக்க திருத்தப்பட வேண்டிய கருத்தாகும்.

இது போன்ற சிந்தனைகள் மிகுந்த ஆபத்து நிறைந்ததாகும். உலகம் முழுவதும் இன்று அனுபவித்துக் கொண்டிருக்கும் மோசடிகள் நிறைந்த ஜனனாயக ஒழுங்கின் பால் விடுக்கப்பட்ட அழைப்பு என்ற அடிப்படையிலும், ஜனனாயகம் என்பது அல்லாஹுத் தஆலாவின் சாபத்துக்கும் தண்டனைக்கும் உரிய பாவம் என்பதாலும் இவரின் அழைப்பு சத்திய இஸ்லாத்தோடு அசத்தியத்தைக் கலப்பதற்காக விடுக்கப்பட்ட அறை கூவலாகவே பார்க்கப்பட வேண்டும்.

ஆலோசனை (மஷுரா) செய்தல் என்ற விடயம் இஸ்லாமிய ஷரீஆ எம்மீது கடமையாக்கிய அம்சம் என்பதில் எவ்வித முரண்பாடும் இல்லை.ஆயினும் இன்று நடைமுறையிலுள்ள பாராளுமன்ற ஜனனாயக முறையும் இஸ்லாம் பணிக்கின்ற ஆலோசனையும் ஒன்று தான் என தவறுதலாக புரிந்தமையில் தான் மிகப் பெரிய தவறு நிகழ்ந்துள்ளது. இங்கு தான் தெளிவான இஸ்லாமிய ஆதாரங்களோடு முரண்பாடு தோன்றியுள்ளது.

நவீன ஜனனாயகம் என்றால் என்ன?என்பதைப் பற்றித் தெரிந்து கொண்டதன் பின்பே ஜனனாயத்தின் பால் அழைப்பதும் அதன் படி ஆட்சியொன்றை நிருவுவதும் இஸ்லாமிய ஷரீஆப்படி கூடுமா? கூடாதா?என்ற முடிவுக்க வர முடியும்.

முதலாளித்துவக்கொள்கையின் ஒரு முக்கிய அம்சம் மக்களாட்சியாகும். மக்களுக்காக மக்களால் மக்களாகவே நடத்தும் ஆட்சியே மக்களாட்சியாகும். இவ்வாட்சிமுறையில் அனைத்து ஆட்சி அதிகாரமும் மக்கட்கேயாகும். எனவே மக்களே தமக்காக சட்டமியற்றுபவர் ஆவர். அவர்களே தாம் விரும்பிய சட்டத்தை நடைமுறைபடுத்தும் அதிகாரம் பெற்றவர்கள். தமக்கு விருப்பமில்லாத சட்டங்களை அமுல் செய்வதினின்றும் தடுத்து விடுவதற்கும் மக்களுக்கு அதிகாரமிருக்கிறது. இந்த சட்டங்கள் அனைத்தையும் அனைத்து மக்களும் நேரடியாக பங்குபற்றி இயற்ற இயலாததால் தமக்காக ஒரு பொது பிரதிநிதியை நியமிப்பார்கள். இதன்படி தமது சார்பாக அவரிடமே சட்டமியற்றும் அதிகாரத்தை அளிக்கின்றனர். ஆட்சிசெய்யும் அதிகாரமும் மக்கட்கே. எனவே தமக்காக ஒரு பொது ஆட்சியாளரை தேர்ந்தெடுக்கின்றனர். எனவே மேற்கத்திய முதலாளித்துவ ஆட்சியில் மக்களே அனைத்து அதிகாரமும் படைத்தவராவர்.

மக்களாட்சிமுறை (Sovereignty belongs to people not Allah swt) இஸ்லாமிய சட்டதிட்டங்கட்கு அப்பாற்பட்டதாகும். ஏனெனில் ஒரு முஸ்லிம் நடைமுறைபடுத்தவேண்டிய சட்டம் அல்லாஹ்விடமிருந்தே வருவதாகும்.ஒரு முஸ்லிம் அல்லாஹ்வின் அடிமை. ஆதலால் அல்லாஹ்(சுபு) அமைத்த பாதை வழி நடப்பதும் அவன் அனுமதிக்காதவற்றினின்று விலகியிருப்பதும் கடமையாகும். அனைத்து ஆட்சி அதிகாரமும் அல்லாஹ்(சுபு)விடமே இருப்பதால் முஸ்லிம் உம்மா தனது விருப்பப்படி நடக்க இயலாது. முஸ்லிம் உம்மா அல்லாஹ்(சுபு) விலக்கியவற்றை (உதாரணம்:வட்டிப்பணம்) நடைமுறைப்படுத்த இசையுமானால் அச்சட்டத்திற்கு எவ்வித அங்கீகாரமும் இஸ்லாத்தில் இல்லை. அடிப்படையில் அது ஷாPஆவிற்கு எதிரானது. அதனை எதிர்த்து போராடுவது கடமையாகும். ஆனாலும் மக்களை ஆட்சி புரியவும் ஷாPஆவை நடைமுறைபடுத்தவும் அதிகாரம் படைத்த ஆட்சியாளரை தமக்காக தேர்ந்தெடுக்கும் உரிமை முஸ்லிம் உம்மாவிற்கு வழங்கப்பட்டுள்ளது.இதன் மூலம் மக்களாட்சி முறை இஸ்லாமிய முறை அல்ல. மேலும் அது இஸ்லாத்திற்கு எதிரான ஒரு கோட்பாடாகும் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ஜனனாயக ஆட்சியில் உள்ள தேர்தல் (ஆட்சி செய்யக் கூடியவர்களை தெரிவு செய்யும்) முறையை இஸ்லாம் அங்கீகரித்தாலும் தெரிவு செய்யப்பட்டவர்கள் இணைந்து ஹலாலை ஹராமாக்கும் ஹராத்தை ஹலாலாக்கும் சட்டமியற்றும் அதிகாரத்தை ஒரு போதும் மனிதனுக்குத் தர வில்லை. நிர்வாக ரீதியாக(உதாரணமாக வீதிப் போக்குவரத்து, முதலீடுகள் தொடர்பான) சட்டங்களை இயற்றக் கூடிய அனுமதியை இஸ்லாம் வழங்கியிருந்தாலும் நம்பிக்கைக் கோட்பாடு, வணக்க வழிபாடுகள், கொடுக்கல் வாங்கல், குற்றவியல்,திருமணம், வாரிசு உரிமை,மற்றும் வெளிநாட்டுக் கொள்கை போன்றவற்றில் மக்கள் ஆலோசனை செய்து சட்டத்தை உருவாக்குவதற்கு ஒரு போதும் இஸ்லாம் இடம் தரவில்லை. எனவே நவீன ஜனனாயகம் என்பது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்பது இங்கே மிகவும் தெளிவாக காணமுடிகின்றது.

இஸ்லாமிய அரசின் கோட்பாடுகளான (1)ஆட்சியதிகாரம் அல்லாஹ்வுக்குரியது, (2)ஆட்சி என்பது முஸ்லிம் சமூகத்துக்குரியது, (3)ஆட்சியாளரான கலீபா ஒருவராக இருப்பது அவசியம்,(4)இஸ்லாமிய கொள்கைகளையும் கோட்பாடுகளையும் நடைமுறைப்படுத்தும் உரிமை கலீபாவுக்கு மாத்திரமே உண்டு என்ற கோட்பாடுகளுக்கு நேரடியாக முரண்படுகின்ற ஆட்சி முறையே ஜனனாயக ஆட்சி முறை என்பதும் தெளிவாகின்றது.

4:65 فَلَا وَرَبِّكَ لَا يُؤْمِنُونَ حَتَّىٰ يُحَكِّمُوكَ فِيمَا شَجَرَ بَيْنَهُمْ ثُمَّ لَا يَجِدُوا فِي أَنفُسِهِمْ حَرَجًا مِّمَّا قَضَيْتَ وَيُسَلِّمُوا تَسْلِيمًا4:65.

உம் இறைவன் மேல் சத்தியமாகஇ அவர்கள் தங்களிடையே எழுந்த சச்சரவுகளில் உம்மை நீதிபதியாகஇ ஏற்றுப் பின்னர் நீர் தீர்ப்பு செய்தது பற்றி எத்தகைய அதிருப்தியையும் தம் மனங்களில் கொள்ளாது (அத்தீர்ப்பை) முற்றிலும் ஏற்றுக் கொள்ளாத வரையில்இ அவர்கள் நம்பிக்கை கொண்டவர்கள் ஆகமாட்டார்கள்.

4:59 يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَأُولِي الْأَمْرِ مِنكُمْ ۖ فَإِن تَنَازَعْتُمْ فِي شَيْءٍ فَرُدُّوهُ إِلَى اللَّهِ وَالرَّسُولِ إِن كُنتُمْ تُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ ۚ ذَٰلِكَ خَيْرٌ وَأَحْسَنُ تَأْوِيلًا4:59.

நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள்; இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும்இ உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள்; உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் - மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும்இ இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் - அதை அல்லாஹ்விடமும்இ (அவன்) தூதரிடமும் ஒப்படைத்துவிடுங்கள் - இதுதான் (உங்களுக்கு) மிகவும் சிறப்பானஇ அழகான முடிவாக இருக்கும்.

33:36 وَمَا كَانَ لِمُؤْمِنٍ وَلَا مُؤْمِنَةٍ إِذَا قَضَى اللَّهُ وَرَسُولُهُ أَمْرًا أَن يَكُونَ لَهُمُ الْخِيَرَةُ مِنْ أَمْرِهِمْ ۗ وَمَن يَعْصِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ ضَلَّ ضَلَالًا مُّبِينًا33:36.
 
மேலும்இ அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப்பற்றிக் கட்டளையிட்டு விட்டால்இ அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை; ஆகவேஇ அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸூலுக்கும் எவரேனும் மாறு செய்தால் நிச்சயமாக அவர்கள் பகிரங்கமான வழிகேட்டிலேயே இருக்கிறார்கள். ۚ وَمَن لَّمْ يَحْكُم بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَٰئِكَ هُمُ الظَّالِمُونَ5:45. எவர்கள் அல்லாஹ் இறக்கி வைத்த (வேதக் கடடளைப்)படி தீர்ப்பு வழங்கவில்லையோ நிச்சயமாக அவர்கள் அநியாயக் காரர்களே!وَمَن لَّمْ يَحْكُم بِمَا أَنزَلَ اللَّهُ فَأُولَٰئِكَ هُمُ الْفَاسِقُونَ5:47. அல்லாஹ் இறக்கி வைத்ததைக் கொண்டு யார் தீர்ப்பளிக்கவில்லையோ அவர்கள் தான் பாவிகளாவார்கள்.
 
மேலே குறிப்பிடப்பட்ட வசனங்கள் மற்றும் இது போன்ற பல வசனங்கள், ஹதீஸ்களின் படியும் ஆட்சியதிகாரத்தை ஒரு போதும் மனிதனுக்குக் கொடுக்க முடியாது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.
 
இஸ்லாமிய ஆட்சி முறை என்பது ஒரே ஒரு தலைமையாகவும்; ஒரேயொரு நாடாகவும் இருப்பது கடமை என்ற அடிப்படையில் பல நாடுகளை ஒன்று சேர்த்து பல தலைவர்களாக ஆட்சி புரிகின்ற ஐரோப்பிய ஒன்றியம் போன்ற பெடரல் ஆட்சி முறையை நோக்கி அழைப்பது தெளிவான குப்ரின் பால் விடுக்கின்ற அழைப்பாகும். இரண்டு கலீபாக்களுக்கு சத்தியப்பிரமாணம் கொடுக்கப்பட்டால் இரண்டாமவரைக் கொலை செய்யுங்கள் என்ற நபி மொழி இதற்கான சான்றாகும்.
 
கடந்த இரு தசாப்தங்களுக்கு முன்னர் கால்மாக்ஸின் சமத்துவக் கொள்கை கிழக்கு ஐரோப்பாவிலும் ரஷ்யாவிலும் வீழ்ச்சியடைந்ததைப் போன்று இன்று முதலாளித்துவப் பொருளாதார ஒழுங்கு மேற்குலகில் செல்வாக்கிழந்து நளிவுற்று வருவதை அவதானிக்கிறோம்.இரண்டுமே மக்களால் மக்களை ஆளுதல் என்ற அடிப்படையில் அமைந்த சித்தாந்தங்களாகும்.இன்றைய மனித சமூகம் இஸ்லாம் எனும் புதிய உதயத்தை எட்டிப் பார்த்துக் கொண்டிருக்கும் தருணமே இது. இந்த உதயம் சடத்துவ உலகின் நெரிசலிலிருந்து மக்களைக் காப்பாற்றி இம்மை மறுமையின் விசாலத்தை நோக்கி அழைத்துச் செல்லக் கூடியது.அல்லாஹ்வின் வார்த்தையை உயர்த்தவும், அவனின் ஷரீஅத்தை நடை முறைப்படுத்தவும், மனித சமூகம் முழுவதற்கும் அல்லாஹ்வின் தூதை சுமந்து செல்லவும் ஏகத்துவ சமூகமான எமது முஸ்லிம் சமூகத்துக்கு வாய்க்கப் பெற்ற வாய்ப்பை உதாசீனம் செய்யாமல் நபிவழியில் அமைந்த கிலாபா ஆட்சியை அமைப்பதற்காக குரல் கொடுப்பதும், கூடி உழைப்பதும் எம்மீதுள்ள கடமையாகும்.
 
இன்று, சர்வாதிகாரத்தின் மூலம் மக்களை அடக்கி ஆண்டு வந்தவர்களின் ஆட்சிகள் முடிவுக்கு வருகின்றதைப் நிதர்சனமாகப் பார்த்துக் கொண்டிருக்கும் நாம், அடுத்து என்ன செய்வது என்ற கேள்விக்கு எமது மனம் போன போக்கில் கருத்துக் கூறாமல் இஸ்லாமிய ரீதியில் விடையைத் தேடி அதற்காக அழைப்பவர்களாகவும் உழைப்பவர்களாகவும் எம்மை மாற்றிக் கொள்வதையே இறைவன் எம்மிடம் எதிர் பார்க்கின்றான்.
 
இஸ்லாமிய சட்டதிட்டங்களைப் பூரணமாக நடை முறைப் படுத்தும் நபி வழியில் அமைந்த கிலாபா ஆட்சி முறை தான் முஸ்லிம்களின் ஆட்சி முறையாகும்.இதற்காக பாடு படுவதும் இதன் பால் அழைப்பதுமே எமது ஏகோபித்த அறைகூவலாக இன்று இருக்க வேண்டும்.
 
நபிகள் நாயகம் (ஸல்)அவர்கள் கூறினார்கள்: 'அல்லாஹ் நாடிய காலம் உங்களுக்கு மத்தியில் நபித்துவம் இருக்கும். அல்லாஹ் நாடும் போது அதனை உயர்த்தி விடுவான்.பின்பு அல்லாஹ் நாடிய காலம் நபித்துவத்தின் வழியில் அமைந்த கிலாபத் ஆட்சி இருக்கும்.அல்லாஹ் நாடும் போது அதனையும் உயர்த்தி விடுவான்.பின்பு அல்லாஹ் நாடிய காலம் கடினமான மன்னராட்சி முறை இருக்கும். அல்லாஹ் நாடும் போது அதனையும் உயர்த்தி விடுவான்.பின்பு அல்லாஹ் நாடிய காலம் அடக்கியாளும் மன்னராட்சி இருக்கும்.அல்லாஹ் நாடும் போது அதனையும் உயர்த்தி விடுவான்.பின்பு நபி வழியில் அமைந்த கிலாபத் ஆட்சி இருக்கும்'என்று கூறிவிட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அமைதி காத்தார்கள்.ஹுதைபா ரழி அவர்கள் அறிவிக்கின்ற இந்த நபி மொழி முஸ்னது அஹ்மதில் பதிவாகியுள்ளது.மேற்படி நபிவாக்கைப் பார்க்கின்ற போது நாம் எதன் பால் அழைக்க வேண்டும் என்பதை மிகத் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகின்றது.அது கிலாபா ஆட்சியே தவிர ஜனனாயகத்தின் அடிப்படையில் அமைந்த 'பெடரல்' ஆட்சியல்ல என்பதையும் மனிதன் இயற்றக்கூடிய சட்டங்களால் ஆளப்படுகின்ற வேறு எந்த ஆட்சி முறையுமல்ல.
 
கிலாபா ஆட்சி முறையல்லாத எந்த ஆட்சி முறையின் பால் அழைப்பதும் தெளிவான வழிகேடாகும்.இதனை அல்லாஹ் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள மாட்டான்.ஆல்லாஹ் (சுபு)தஆலா கூறுவதைக் கேளுங்கள்
 
:5:48 وَأَنزَلْنَا إِلَيْكَ الْكِتَابَ بِالْحَقِّ مُصَدِّقًا لِّمَا بَيْنَ يَدَيْهِ مِنَ الْكِتَابِ وَمُهَيْمِنًا عَلَيْهِ ۖ فَاحْكُم بَيْنَهُم بِمَا أَنزَلَ اللَّهُ ۖ وَلَا تَتَّبِعْ أَهْوَاءَهُمْ عَمَّا جَاءَكَ مِنَ الْحَقِّ ۚ لِكُلٍّ جَعَلْنَا مِنكُمْ شِرْعَةً وَمِنْهَاجًا ۚ وَلَوْ شَاءَ اللَّهُ لَجَعَلَكُمْ أُمَّةً وَاحِدَةً وَلَٰكِن لِّيَبْلُوَكُمْ فِي مَا آتَاكُمْ ۖ فَاسْتَبِقُوا الْخَيْرَاتِ ۚ إِلَى اللَّهِ مَرْجِعُكُمْ جَمِيعًا فَيُنَبِّئُكُم بِمَا كُنتُمْ فِيهِ تَخْتَلِفُونَ5:48.
 
 மேலும் (நபியே! முற்றிலும்) உண்மையைக் கொண்டுள்ள இவ்வேதத்தை நாம் உம்மீது இறக்கியுள்ளோம். இது தனக்கு முன்னிருந்த (ஒவ்வொரு) வேதத்தையும் மெய்ப்படுத்தக் கூடியதாகவும் அதைப் பாதுகாப்பதாகவும் இருக்கின்றது. எனவே அல்லாஹ் அருள் செய்த(சட்ட திட்டத்)தைக் கொண்டு அவர்களிடையே நீர் தீர்ப்புச் செய்வீராக; உமக்கு வந்த உண்மையை விட்டும் (விலகி) அவர்களுடைய மன இச்சைகளை நீர் பின்பற்ற வேண்டாம். உங்களில் ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் ஒவ்வொரு மார்க்கத்தையும், வழிமுறையையும் நாம் ஏற்படுத்தியுள்ளோம்; அல்லாஹ் நாடினால் எங்கள் அனைவரையும் ஒரே சமுதாயத்தவராக ஆக்கியிருக்கலாம்; ஆனால், அவன் உங்களுக்குக் கொடுத்திருப்பதைக் கொண்டு உங்களைச் சோதிப்பதற்காகவே (இவ்வாறு செய்திருக்கிறான்); எனவே நன்மையானவற்றின்பால் முந்திக் கொள்ளுங்கள். நீங்கள் யாவரும் அல்லாஹ்வின் பக்கமே மீள வேண்டியிருக்கிறது; நீங்கள் எதில் மாறுபட்டு கொண்டிருந்தீர்களோ அத(ன் உண்மையி)னை அவன் உங்களுக்குத் தெளிவாக்கி வைப்பான்.
 
சத்தியத்தை சத்தியமாக விளங்கி அதனைத் துயரவும் அசத்தியத்தை அசத்தியமாக விளங்கி அதனைத் தவிர்ந்து கொள்ளவும் அல்லாஹ் எமக்கு அருள்பாளிப்பானாக! (ஆக்கம்:அபூ அய்யூப் முஹம்மது)

Home             Sri Lanka Think Tank-UK